What Happens in Vegas
Posted by Raja Raja Cholan | Posted in What Happens in Vegas | Posted on 2:02 AM
1

தண்ணியடிச்சு கூத்தடிச்ச ஒருநாள் கூத்து என்னென்னலாம் ஆகும் என்பதுதான் What Happens in Vegas படத்தின் மொத்த கதையும். The butterfly effect னு ஒரு படம் வந்துச்சே, அந்த படத்தோட கதாநாயகன்தான் இங்கயும். நாயகி வேற யாருமில்லை நம்ம கேமரூன் டயZ. அக்காச்சி சின்சியர் சிகாமணி ஜோய், ஸ்டாக்ப்ரோக்கரா இருக்காங்க. ஆபீஸு-வேலை-ஸ்டாக்கு-வீடுன்னு இருந்தா போதுமா, கொஞ்சம் லவ்வரையும் எட்டி பார்க்கவேணாமா? அண்ணன் திண்ணையை காலிபண்ணிட்டு வேற எவனயாவது பாத்துக்கன்னு போயிட்டாரு. அக்கா ரொம்பவும் நொடிஞ்சி போறாங்க. இன்னொரு பக்கம் ஊதாரி ஊத்தப்பனா இருக்கிறாரு ஜேக். ஒருவேலைக்கும் லாயக்கு இல்லைன்னு அவங்கப்பாவே தொரத்திவிட, இரண்டும் லாஸ் வேகஸில் சந்திக்கிறாங்க. லாஸ் வேகஸ் என்ன சாதாரண ஊரா? கூத்துக்கும் கும்மாளத்துக்கும் பேரு போன ஊராச்செ, இரண்டு கெட்டு குட்டிச்செவராக ஒரே ரூமுல கூத்தடிக்க, அடுத்த நாளு எந்திருச்சி பார்த்தா, ஜோய்யோட ஹஸ்பண்டு நம்ம தலைவரு ஜேக். நைட் என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சிக்க ஆவலாத்தான் இருந்திச்சு.
சரி விடுறா மாப்ள, ஏதோ தெரியாத்தனமா கையில ரிங் மாட்டிவிட்டுட்ட, கழட்டி போட்டிரலாம்னு ரெண்டும் யோசிச்சுட்டு, ஜோய்கிட்ட காசு வாங்கி ஜேக் அடிச்சார் ஜேக்பாட். சும்மா இல்லை மூனு மில்லியன் டாலர். அது எனக்குத்தான்ன்னு ரெண்டும் கொண்டாட, யாரு வூட்டு பனத்தை யாரு திங்கறதுன்னு அப்பவே அடிச்சிக்க, அக்காச்சி ஜோய் கையில இருக்கிற ரிங்கை காட்டி, டேய் மவனே நீ என்னோட புருஷண்டா, மூனுமில்லியன் எனக்குடான்னு சொல்றாங்க. வண்டி நேரா கோர்ட்டுக்கு போவுது. கனம் கோர்ட்டாலர் அவர்களேன்னு பெரிய வசனமெல்லாம் பேசாம, சிம்பிலா, ஒரு ஆறுமாசம் புருஷன் பொஞ்சாதியா வாழ்ந்துட்டு வாங்க அப்பறமா பணத்தை பத்தி யோசிப்போம்னு கவுன்சிலிங்குக்கு ஒருத்தரை நியமிக்கிறாங்க. அது வேற யாருமில்லை Queen Latifah. சிகாகோவில் பார்த்தது, அம்மணி இன்னும் அப்படியேதான் இருக்காங்க. ஜேக் வாடகைக்கு ஒரு இத்துப்போன ப்ளாட்டை எடுத்து அதில ஜோய்யை கொண்டு போய் குடியமர்த்தி குடும்பம் பார்க்கிறாரு. தனி பெட்டு வேற.. (ஜஸ்ட் மிஸ்.) பர்திலிருந்து பாத்ரூம் வரைக்கும் சின்சியர் அக்காவுக்கு பிரச்சனையோ பிரச்சனை. ரெண்டு பேரும் ஒவ்வொரு தடவையும் அடிச்சிக்கிட்டு கவுன்சிலிங் மேடத்துகிட்ட போறாங்க. நம்ம ராணி லதிபாவும் ஒரு நல்ல ஹஸ்பண்டு அண்ட் வைபுக்கு உண்டான தகுதியோட வரீங்கன்னு சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாங்க. ஜேக்கோட ப்ரண்ட் கேஸில்லாத வக்கீல் ஒருத்தர் நிறைய ஐடியா கொடுக்கிறாரு. எதுவும் பிரயோஜனமில்லாம பொவுது. மூஞ்சில காயமானதுதான் மிச்சம். ஆகமொத்தத்தில கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே லவ் பண்ராங்ககிறதுதான் படத்தில மீதி. கடைசியா, ஜோய்யாட பாஸ், விருந்துக்குக் கூப்பிடறாரு, அதில ஜோய்ய கவுத்தி, பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு கையெழுத்து வாங்குன்னு வக்கிலோட ஐடியாவில் ஜேக் போறாரு. ஆனா நடந்தது வேற, பெஸ்ட் கபில்னு விருது வாங்கற அளவுக்கு ரெண்டு பேரும் ஆக்ட் கொடுக்கிறாங்க. இப்ப ரெண்டு பேருகிட்டயும் லவ்வு இருக்கு, ஆனா சொல்லிக்கல. அப்பறம் என்ன, ஜட்ஜு கொடுத்த ஆறுமாசம் முடிஞ்சி போச்சி, பணம் கொஞ்சம் கரைஞ்சி போச்சு, ஜோய் ரொம்ப வெறுத்து போய் டைவர்ஸ் மட்டும் போதும் நீயே பணத்த வெச்சுட்டு அழுவுன்னு போயிட்டாங்க. முதல் தடவையா கேஸ் ஜெயிச்ச சந்தோஷத்தில வக்கீல் கொண்டாட, ஜேக்குக்கு இது எதிர்பாரத முடிவுதான். அப்பறம் என்ன, சீதைய தேடிட்டு ராமன் போனமாதிரி போய்பார்த்து திரும்பவும் என்னை கட்டிக்கொன்னு மண்டிபோடறாரு. படம் சுபம். அதுசரி, ஆக்சுவலி What happens in vegas? அது படத்தோட முடிவுல இருக்கு....